Tamil Isai Maalai
தமிழ் இசை மாலை
🎵 Songs Index
1. Vaarum Iyya Pothagare (வாரும் ஐயா போதகரே)
A prayer inviting Christ to come, remain with us, guide the Church, and bring light, comfort, wisdom, and blessing.
வாரும் ஐயா, போதகரே, வந்தெம்மிடம் தங்கியிரும்; சேரும் ஐயா பந்தியினில் x2, சிறியவராம் எங்களிடம்.
Vaarum Aiyaa, Pothakarae, Vanthemmidam Thangiyirum; Serum Aiyaa Panthiyinil x2, Siriyavaraam Engalidam.
ஒளிமங்கி இருளாச்சே, உத்தமனே, வாரும் ஐயா! கழித்திரவு காத்திருப்போம் x2, காதலனே, கருணை செய்வாய்
Olimangi Irulaachchae, Uththamanae, Vaarum Aiyaa! Kaliththiravu Kaaththiruppom x2, Kaathalanae, Karunnai Seyvaay.
3. உன்றன் மனை திருச்சபையை உலகமெங்கும் வளர்த்திடுவாய், பந்தமறப் பரிகரித்தே x2 பாக்யம் அளித் தாண்டருள்வாய்.
3. Untan Manai Thiruchchapaiyai, Ulakamengum Valarththiduvaay, Panthamarap Parikariththae x2, Paakyam Alith Thaanndarulvaay.
4. ஆதரையில் எம் ஆறுதலே, அன்பருக்குச் சதா உறவே பேதையர்க்குப் பேரறிவே x2 பாதை மெய் ஜீவ சற்குருவே
4. Aadharaiyil Em Aarudhale, Anbarukkuch Sadhaa Uravae Pedhaiyarkkup Perarive x2, Paadhai Mei Jeeva Sarkuruve
5. பாடும் வேத நாயகன் கவி, பாரினில் கேட்டு அனுதினமும் கெளுந்தொண்ட துலங்க உந்தன்x2 திவ்ய ஆசீர் தந்தருள்வாய்
5. Paadum Vedhanaayagan Kavi, Paarinil Kettu Anudhinamum Kezhundhonda Thulanga Undhan x2, Divya Aaseer Thandharulvaai
2. Paadi Thuthi Maname (பாடித் துதி மனமே பரனைக்)
A song of thanksgiving that calls us to remember God’s love, grace, and the many ways he has drawn us into his family and revealed himself to us.
பாடித் துதி மனமே பரனைக் கொண்டாடித் துதி தினமே x2 நீடித்த காலமதாகப் பரன் எமை x2 நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து – பாடித் துதி மனமே …
Paadi Thuthi Maname Paranaik Kondaadith Thuthi Dhiname x2 Neediththa Kaalamadhaagap Paran Emai Nesiththa Patchaththai Vaasiththu Vaasiththu
1. சொந்த ஜனமாக யூதர் இருந்திட தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் – பாடித் துதி மனமே …
1. Sondha Janamaaga Yoodhar Irundhida Tholaiyil Kidandha Puramaandharaam Emai Mandhaiyil Serththup Paraaparan Thammudai Maindhargalaakkina Sandhoshaththukkaagap — Paadi Thuthi Maname
2. தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச் செப்பின தேவபரன் இந்தக் காலத்தில் மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடித் துதி மனமே …
2. Theerkkadharishigalaik Kondu Munnurach Seppina Dhevaparan Indhak Kaalaththil Maarkkamadhaagak Kumaaranaik Kondu Vilakkina Anbai Vizhaindhu Dhiyaaniththup — Paadi Thuthi Maname
3. எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர் எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள் எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை- பாடித் துதி மனமே பரனைக் கொண்டாடித் துதி தினமே x2 நீடித்த காலமதாகப் பரன் எமை x2 நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து – பாடித் துதி மனமே …
3. Eththanai Theerkkar Anega Apposthalar Eththanai Bodhagar Iraththa Saatchigal Eththanai VendumO Aththanaiyum Thandhingu Iththanaiyaai Kirubai Vaiththa Nam Karththanai Paadi Thuthi Maname Paranaik Kondaadith Thuthi Dhiname x2 Neediththa Kaalamadhaagap Paran Emai Nesiththa Patchaththai Vaasiththu Vaasiththu
3. Sundara Parama Deva (சுந்தரப் பரம தேவமைந்தன்)
A joyful song of praise to Jesus Christ, celebrating his saving love, grace, victory, and the call for all creation and all people to worship him.
சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத் தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் x2 அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து ஆற்றினார், நமை ஒன்றாய்க் கூட்டினார், அருள் முடி சூட்டினார், கிருபையால் தேற்றினாரே துதி – சுந்தரப் பரம x1
Sundara Parama Deva Maindhan Yesu Kristhuvukkuth Sthoththiram Pugazhchi Niththiya Keerthanam Endrum x2 Andharam Puviyum Thandhu Sondha Jeevanaiyum Eendhu Aatrinaar, Namai Ondraai Koottinaar, Arul Mudi Soottinaar Kirubaiyaal Thetrinaarae Thudhi — Sundara Parama
1. பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த பாவிகளான நமை உசாவி மீட்டாரே வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில் கூடுங்கள், பவத்துயர் போடுங்கள், ஜெயத்தைக் கொண் டாடுங்கள் துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும் – சுந்தரப் பரம.. x1
1. Paadhagap Pisaasaal Vandha Theedhenum Pavaththaal Nondha Paavigalaana Namai Usaavi Meettaarae Vedha Pithaavukkugandha Jaadhiyaagak Koottavandha Mesiyaavaip Pattrum Visuvaasa Veettaarae Kodhanugaa Needhiparan Paadhamadhin Aadharavil Koodungal Pavaththuyar Podungal Jeyaththaik Kondu Aadungal Thudhi Sollip Paadungal, Paadungal Endrum — Sundara Parama x1
2. விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும் விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும் வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண்டாடிட அவர் பதம் தேடிட வெகு திரள் கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்றும் – சுந்தரப் பரம x1
2. Vinnilulla Jodhigalum Enn Adangaach Senaigalum Vindhaiyaai Kristhuvaip Panindhu Pottravae Mannilulla Jaadhigalum Nannum Pala Porulgalum Vallabaran Enath Thudhi Solli Eththavae Annalaam Pithaavuk Kore Punniya Kumaaranaik Kondaadida Avar Padham Thedida, Vegu Thiral Koodida Thudhi Pugazh Paadidap Paadida Endrum — Sundara Parama x1
3. சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும் சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும் ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும் உயர்ந்து வாழ தீயோன் பயந்து, தாழ மிக நயந்து, கிறிஸ்வுக்கு ஜெயந்தான் நயந்தான் என்றும் – சுந்தரப் பரம x1
3. Saththiyath Tharasargalum Viththagap Periyaargalum Sangaththorgalum Kirubai Thangi Vaazhavae Eththisai Manidhargalum Bakthar Visuvaasigalum Ega Migun Samaadhaanamaaga Vaazhavae Uththama Bodhagargalum Saththiya Thiruchchabaigalum Uyarndhu Vaazha, Theeyon Bayandhu Thaazha Miga Nayandhu, Kristhuvukku Jeyandhaan Nayandhaan Endrum — Sundara Parama
4. Karthane Em Thunaiyaaneer (கர்த்தனே எம்துணையானீர்)
A song of trust in God as our refuge and constant companion, especially when relationships fail, people disappoint us, or life becomes difficult.
1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும், கர்த்தனே அடைக்கல மாயினார் (2) மனுமக்களில் இவர் போலுண்டோ, விண் உலகிலும் இவர் சிறந்தவர்
1. Eththanai Idar Vandhu Serndhaalum Karththanae Adaikkalamaayinaar (2) Manumakkalil Ivar Pol Undo Vinnulagilum Ivar Sirandhavar
கர்த்தனே எம் துணையானீர், நித்தமும் EM நிழலானீர் கர்த்தனே எம் துணையானீர்
Karththanae Em Thunaiyaaneer Niththamum Em Nizhalaaneer Karththanae Em Thunaiyaaneer
2. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார் நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2) கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார் ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை – கர்த்தனே எம் துணையானீர்
2. Sutraththaarum Kaalaththil Kulirndhittaar Nambinorum Edhiraaga Vandhittaar (2) Kolgai Kooriye Palar Pirindhittaar Aiyaa, Ummaippol Naan Engum Kandadhillai — Karththanae Em Thunaiyaaneer
3. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார் ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2) ராஜா உம் அன்பு எனைக் கண்டது உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே எம் துணையானீர்
3) Paavi Endrennai Palar Thallinaar Aavi Illai Endrigazhdhum Vittaar (2) Raajaa, Um Anbu Enaik Kandadhu Ummaippol Aiyaa, Engum Kandadhillai — Karththanae Em Thunaiyaaneer
4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும் ராஜனே, உமைப் பாடக்கூடுமோ (2) ஜீவனை உமக்களிக்கின்றேனே உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே எம் துணையானீர்
4. Aayiram Naavugal Neer Thandhaalum Raajanae, Umaip Paadakkoodumo (2) Jeevanai Umakkalikkinraenae Ummaippol Aiyaa, Engum Kandadhillai — Karththanae Em Thunaiyaaneer
5. Sathiya Vedham Bhaktharin (சத்திய வேதம் பக்தரின் கீதம்)
A celebration of God’s Word as light, guidance, comfort, and truth – sustaining believers and remaining firm even when everything else passes away.
சத்திய வேதம் பக்தரின் கீதம் சுத்தர்கள் போகும் பாதையின் தீபம் உத்தம மார்க்கம் காட்டும் எத்தனை துன்பம் துயரம் வந்தும் பக்தனை தேற்றிடும் ஒளஷதம் x2 சத்திய வேதம்
Saththiya Vedham Baktharin Geetham Suththargal Pogum Paathaiyin Dheepam Uththama Maarkkam Kaattum Eththanai Thunbam Thuyaram Vandhum Bakthanai Thetridum Oushadham x2 Saththiya Vedham
1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம் சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன் x2 இதயம் மகிழும் கண்கள் தெளியும் இருண்ட ஆத்துமா உயிரடையும் x2 – சத்திய வேதம்
1. Niththam Virumbum Karththar Vasanam Suththa Pasumpon Thelindhidum Then x2 Idhayam Magizhum Kangal Theliyum Irunda Aaththumaa Uyiradaiyum x2 – Saththiya Vedham
2. வேதப் பிரியர் தேவப் புதல்வர் சேதமடையா நடத்திடுவார் x2 இலைகள் உதிரா மரங்கள் போல இவர்கள் நல்ல கனி தருவார் x2 – சத்திய வேதம்
2. Vedhap Priyar Dheva Pudhalvar Sedhamadaiyaa Nadaththiduvaar Ilaigal Udhiraa Marangal Pola Ivargal Nalla Kani Tharuvaar — Saththiya Vedham
3. வானம் அகலும் பூமி அழியும் வேத வசனம் நிலைத்திருக்கும் x2 பரமன் வேதம் எனது செல்லவம் பரவசம் நிதம் அருளும் x2 சத்திய வேதம்
3. Vaanam Agalum Bhoomi Azhiyum Vedha Vasanam Nilaiththirukkum Paraman Vedham Enadhu Selvam Paravasam Niththam Arulum – Saththiya Vedham
6. Neer Mathram Pothum (யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்)
A declaration that God alone is enough – our provider, healer, companion, peace, creator, and the one whose love gives meaning to our whole life.
யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் நீர் மாத்ரம் போதும் எனக்கு யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம் உம் தழும்புகளால் சுகமானோம் யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர் என் தேவையெல்லாம் சந்திப்பீர் நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு, நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
Yegovaa Yireh Thandhaiyaam Dheivam Neer Maathram Pothum Enakku Yegovaa Rapha Sugam Tharum Dheivam Um Thazhumbugalaal Sugamaanom Yegovaa Shammaa En Kooda Iruppeer En Thevaiyellaam Sandhippeer Neer Maathram Pothum (3) – Enakku, Neer Maathram Pothum (3) – Enakku
1. யெகோவா எலோஹிம், சிருஷ்டிப்பின் தேவனே உம் வார்த்தையால் உருவாக்கினீர் யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே உம்மை போல் வேறு தேவன் இல்லை யெகோவா ஷாலோம் உம் சமாதானம் தந்தீர் என் உள்ளத்திலே நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு, நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
1. Yegovaa Elohim Sirushtippin Dheivane Um Vaarththaiyaal Uruvaakkineer Yegovaa Parisuththar Unnathar Neere Ummai Pol Veru Dheivan Illai Yegovaa Shalom Um Samaadhaanam Thandheer En Ullaththile Neer Maathram Pothum (3) – Enakku, Neer Maathram Pothum (3) – Enakku
2. யெகோவா நீரே, என் ஆத்ம நேசர் என்னில் எவ்வளவன்பு கூர்ந்தீர் என்னையே மீட்க, உம்மையே தந்தீர் உம் அன்பிற்கு இணையில்லையே என் வாழ்நாள் முழுதும், உமக்காக வாழ்வேன் நீரே என்றென்றும் போதும் நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு, நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு, நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
2. Yegovaa Neere En Aathma Nesar Ennil Evvalavu Anbu Koorndheer Ennaiye Meetka Ummaiye Thandheer Um Anbirku Inai Illaiye En Vaazhnaal Muzhudhum Umakkaaga Vaazhven Neere Endrendrum Pothum Neer Maathram Pothum (3) – Enakku, Neer Maathram Pothum (3) – Enakku Neer Maathram Pothum (3) – Enakku, Neer Maathram Pothum (3) – Enakku
7. Belan Ondrum Illai Deva (பெலன் ஒன்றும் இல்லை தேவா)
A prayer for God’s strength when our own strength is insufficient – asking him to help us overcome temptation, discouragement, weakness, and spiritual struggle.
பெலன் ஒன்றும் இல்லை தேவா, ஆவியால் பெலப்படுத்தும், சத்துவம் இல்லாத எனக்கு, சத்துவம் தந்தருளும் x2 – பெலன் ஒன்றும் இல்லை தேவா
Belan Ondrum Illai Deva Aaviyaal Belappaduththum Saththuvam Illaadha Enakku ,Saththuvam Thandharulum x2 – Belan Ondrum Illai Deva
1. சாத்தானை ஜெயிக்க பெலன் தாரும் சோதனை வெல்ல உதவும் x2 மாய உலகத்தை ஜெயிக்க, என்னையும் பெலப்படுத்தும் x2 – பெலன் ஒன்றும் இல்லை தேவா
1. Saaththaanai Jeyikka Belan Thaarum Sodhanai Vella Udhavum x2 Maaya Ulagaththai Jeyikka Ennaiyum Belappaduththum x2 – Belan Ondrum Illai Deva
2. மானின் கால்களைப் போல என் கால்களை பெலப்படுத்தும் x2 நூனின் குமாரனைப் போல, என்னையும் பெலப்படுத்தும் x2 – பெலன் ஒன்றும் இல்லை தேவா
2) Maanin Kaalgalai Pola En Kaalgalai Belappaduththum x2 Noonin Kumaaranai Pola Ennaiyum Belappaduththum x2 – Belan Ondrum Illai Deva
3. சோர்வுற்ற நேரங்களில் எல்லாம் வழுவாமல் காத்து நடத்தும்x2 கழுகு போல் செட்டைகள் அடித்து உயரே எழும்ப செய்யும் x2 – பெலன் ஒன்றும் இல்லை தேவா
3. Sorvuttra Nerangalil Ellaam Vazhuvaamal Kaaththu Nadaththum x2 Kazhugu Pol Settaigal Adiththu Uyarae Ezhumba Seiyum x2 – Belan Ondrum Illai Deva
8. Deva Senai Vaanameethu (தேவசேனை வானமீது)
A vivid song about Christ’s return and the upheaval of the world, expressed with confidence and joy in the believer’s hope of being united with Christ.
தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும், பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும், விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும், நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா – ( 3 ) அல்லேலூயா , அல்லேலூ அல்லேலூயா , அல்லேலூயா – ( 3 ) அல்லேலூயா , அல்லேலூ
Deva Senai Vaanameedhu Kodi Kodiyaga Thondrum Pala Kodi Thiral Koodi Kugai Thedi Vegam Odum Vinmeengal Idam Maari Paarengum Vandhu Kottum Naano Aadi Migap Paadi En Nesarudan Serven Alleluia, Alleluia – (8)
1. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும், இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும், தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும், நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா …
1. Aindhu Kandam Thanil Aalum Aatchi Yaavum Attrup Pogum Irul Soozhum Idi Muzhangum Koochal Ketkum Kanneer Sindhum Thooyar Koottam Suththa Ullam Saatchi Paadal Engum Ketkum Naano Aadi Migap Paadi En Nesarudan Serven Alleluia, Alleluia – (8)
2. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம், போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்ல, வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும், நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா …
2. Kadal Kumurum Karai Udaiyum Kappal Kavizhum Perum Naasam Pokkuvaraththu Yaavum Nirkum Ini Ulagam Enbadhillai Vaakku Maaraa Vedham Koorum Vaarththai Yaavum Niraiverum Naano Aadi Migap Paadi En Nesarudan Serven Alleluia, Alleluia – (8)
9. Salemin Raja Sangeyin Raja (சாலேமின் ராசா சங்கையின் ராசா)
A longing prayer for the King of Salem to come again, fulfill his promise, establish his reign, and gather his people who are waiting expectantly for him.
சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் x2 இந்தத் தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்சடுதி வாருமேன் x2 – சாலேமின் ராசா..
Salemin Raja Sangaiyin Raja Swami Vaarumen x2 Indha Thaarani Meedhinil Aalugai Seidhida Sadudhi Vaarumen x2 — Salemin Raja
1. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே x2 இந்தச் சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ x2 – சாலேமின் ராசா
Verse 1 Seekkiram Varuvom Endruraiththu Pona Selvak Kumaarane x2 Indha Seeyonin Maadhugal Thedith Thirigindra Seidhi Keleero x2 — Salemin Raja
2. எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதே x2 நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே x2 – சாலேமின் ராசா
Verse 2 Etti Etti Ummai Annaandhu Paarththu Kan Pooththup Pogudhe x2 Neer Suttikkaattip Pona Vaakkuththaththam Niraiveralaagudhe x2 — Salemin Raja
3. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை, நாடித்தேடுதே x2 இந்த நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே x2 – சாலேமின் ராசா
Verse 3 Nangai Erusalem Pattinam Ummai Naadith Thedudhe x2 Indha Naanilaththilulla Jeeva Piraanigal Thedi Vaadudhe x2 — Salemin Raja
4. சாட்சியாகச் சுப-விசேஷம் தாரணிமேவுதே x2 உந்தஞ் சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவி-க்கூவுதே x2 சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் x2 இந்தத் தாரணிமீதினில் ஆளுகை செய்திடச்சடுதி வாருமேன் x2 – சாலேமின் ராசா
Verse 4 Saatchiyaaga Suba Visesham Thaarani Mevudhe x2 Undhan Saatchigaludaiya Raththangallellaam Thaavik Koovudhe x2 Salemin Raja Sangaiyin Raja Swami Vaarumen x2 Indha Thaarani Meedhinil Aalugai Seidhida Sadudhi Vaarumen x2 — Salemin Raja
10. Thasare Itharaniyai Anbai (தாசரே இத்தரணியை அன்பாய்)
A strong call to Christian mission and service – sharing Christ, caring for those who suffer, lifting up the oppressed, bringing light, and working faithfully for God’s kingdom.
தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் x2 நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக் காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம், வெளிச்சம் வீசுவோம் x2 – தாசரே இத்தரணியை அன்பாய்
Thaasare Iththaraniyai Anbaai Yesuvukku Sondhamaakkuvom x2 Nesamaai Yesuvaik Kooruvom, Avaraik Kaanbippom, Maa Irul Neekkuvom, Velichcham Veesuvom x2 – Thaasare Iththaraniyai Anbaai
1. வருத்தப்பட்டுப் பாரஞ்சุมப்போரை வருந்தியன்பாய் அழைத்திடுவோம் உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே x2— தாசரே
1. Varuththappattup Baaram Sumapporai Varundhi Anbaai Azhaiththiduvom Uriththaai Yesu Paavap Baaraththai Namadhu Thukkaththai, Namadhu Thunbaththaich Sumandhu Theerththaare x2— Thaasare
2. பசியuற்றோர்க்குப் பிணியாளிகட்குப் பட்சமாக உதவி செய்வோம் உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே — தாசரே
2. Pasiyutrorukkup Piniyaaligalukkup Patchamaaga Udhavi Seivom Usidha Nanmaigal Niraindhu Thamai Marandhu Yesu Kanindhu Thirindhanare x2— Thaasare
3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நீசரை நாம் உயர்த்திடுவோம் பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே x2— தாசரே
3. Nerukkappattu Odukkappattorai Neesararai Naam Uyarththiduvom Porukka Vonnaa Kashtaththukkul Nishtooraththukkul, Padukuzhikkul Vizhundhanare x2 — Thaasare
4. இந்து தேச மாது சிரோமணிகளை விந்தை யொளிக்குள் வரவழைப்போம் சுந்தர குணங்களடைந்து அறிவிலuயர்ந்து நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட x2 — தாசரே
4. Indhu Desa Maadhu Siromanigalai Vindhai Olikkul Varavazhaippom Sundhara Gunangal Adaindhu Arivil Uyarndhu Nirbandhangal Theerndhu Sirandhilangida x2— Thaasare
5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம் ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம் நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம் x2— தாசரே
5. Maarkkam Thappi Nadapporai Sathya Vazhikkul Vandhida Serththiduvom Ookkamaga Jebiththiduvom, Naam Muyandriduvom Naam Uzhaiththiduvom, Naam Jeyiththiduvom x2— Thaasare
